DR.SALAI GOVINDARAJAN MATRICULATION SCHOOL FOR GIRLS
bradcaump images

CENTENARY CELEBRATION



டாக்டர். சாலை கோவிந்தராஜன் பெண்கள் உயர்நிலை பள்ளி
அயனாவரம், சென்னை - 23.
துவக்கம் 1987



அமரர். கௌசல்யா கோவிந்தராஜன்.,பி.ஏ.,எல்.டி.,
நூற்றாண்டு விழா
09.02.1923 - 09.02.2023


திருமதி.கௌசல்யா கோவிந்தராஜன் அவர்கள் வட ஆற்காடு மாவட்டம் ராணிப்பேட்டையில் 09.02.1923 அன்று பிறந்தார். அவர் தனது பள்ளிப்படிப்பை வாலாஜாபேட்டையிலும், பின்னர் வேலூரில் உள்ள உர்ஹீஸ் கல்லூரியில் இடைநிலைப் படிப்பையும், மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலையில் பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள லேடி விலிங்டன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார். அவர் 1947 ஆம் ஆண்டு டாக்டர்.சா.கோவிந்தராஜன் அவர்களை மணந்தார்.
டாக்டர்.சா.கோவிந்தராஜன் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். அதற்கு முன் அவர் இரண்டாம் உலகப் போரில் இராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்தார். திருமதி.கௌசல்யா அவர்கள் தனது கணவருடன் இங்கிலாந்து சென்று " மனையியலில் " டிப்ளமோ படிப்பினை படித்தார்.
திருமதி.கௌசல்யா கோவிந்தராஜன் அவர்கள் வேலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பின்னர் கோவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியையாக பணியாற்றி 1947 இல் அவர் சென்னையிலுள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகவும், பின்னர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியையானார். அவர் 1968 இல் பெண்கள் பள்ளிகளின் ஆய்வாளராகவும், 1972 இல் சென்னை முதன்மைக் கல்வி அலுவலராகவும் மற்றும் 1975 இல் பள்ளிக் கல்வி துறையின் துணை இயக்குனராகவும் பதவி உயர்வு பெற்று 1978 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
மே 24, 1986 அன்று அவரது கணவர் காலமானார். பிறகு, அவர் தனது கணவர் டாக்டர்.சாலை கோவிந்தராஜன் அவர்கள் நினைவாக பெண்களுக்கான மெட்ரிகுலேஷன் பள்ளியைத் துவங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வெங்கடேசபுரம் தாராப்பூர் கல்வி அறக்கட்டளைக்கு (VTET) தனக்கு சொந்தமான ஒரே சொத்தை நன்கொடையாக வழங்கினார். டாக்டர்.சாலை கோவிந்தராஜன் பெண்கள் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி இன்று வரை இந்த பரோபகார தம்பதிகளின் வாழும் நினைவுச்சின்னமாக உள்ளது. திருமதி.கௌசல்யா கோவிந்தராஜன் 1977 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் வரை வெங்கடேசபுரம் தாராப்பூர் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினராகவும் இருந்தார். பள்ளி தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பொதுத் தேர்வில் இப்பள்ளியின் மாணவிகள் 100% தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
திருமதி.கௌசல்யா கோவிந்தராஜன் அவர்களின் கனவான பெண்கள் கல்வியினை தொடர்ந்து சமுதாயத்திற்கு அர்பணிப்போம் என்று அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நாம் இத்தருணத்தில் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம் என்று உறுதிகொள்வோம்.